இளங்கலை மருத்துவபடிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு, வரும் செம்ப்டம்பர் 12 ஆம் ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதேபோல் கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆகஸ்ட் மாத இறுதியில் கரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் எனவும், செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனையடுத்து நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் உள்ளதாக என மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், "நீட் உள்பட எந்த பொது நுழைவு தேர்வையும் தள்ளிவைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வுக்கு மாணவர்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தேர்வுக்கான அனுமதி அட்டையுடன் இ-பாஸ் வழங்கப்படும் எனவும், தேர்வு மையங்களில் கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளார்.