
இன்று மக்களவையில் நடைபெற்றுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மோடி மக்களுக்கு கொடுப்பதாக சொன்ன 15 லட்சம் எங்கே என கேள்வி எழுப்பினார்.
மேலும் பல ஆவேச கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அப்போது பேசுகையில் அவர் வைத்த கேள்விகள்,
மக்களுக்கு 15 லட்சம் தருவதாக மோடி சொன்னதை மக்கள் இன்னும் மறக்கவில்லை அந்த வாக்குறுதி என்னவாயிற்று. மோடியின் அரசு எப்போதுமே கோட்-சூட் போட்டவர்களுக்கான அரசாகவே இருக்கிறது.
வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆர்வம்காட்டும் பிரதமருக்கு கிராமங்களை சென்று பார்க்க நேரமில்லை.
ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு மக்களின் சிறு சிறு தொழில்கள் முடிங்கியுள்ளது. ஆனால் இந்த அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு சாமரம் வீசும் அரசாக உள்ளது.
அம்பானியின் ஜியோவை விளம்பரப்படுத்தக்கூட மோடியின் புகைப்படம் தேவைப்படுகிறது.
2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என சொன்ன வாக்குறுதி என்ன ஆனது.
பிரான்சுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு ரகசியம் காப்பது ஏன்? ரகசியத்தை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் எனேவ அதற்கான விளக்கத்தை அரசு கொடுக்கவேண்டும் என சரமாரி கேள்விகள் மாற்றும் குற்றச்சாட்டுகளை வைத்ததால் அவையில் சலலப்பு ஏற்பட்டது.