அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'டவ்-தே' புயலாக உருவானது. புயல் காரணமாக இன்று (15/05/2021) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும். மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது தீவிர புயலாக மாறியது 'டவ்-தே' புயல். தீவிர புயலாக மாறி 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத்தில் இருந்து 950 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. அதி தீவிர புயலாக மாறவுள்ள 'டவ்-தே' குஜராத் மாநிலத்தில் 18 ஆம் தேதி கரையைக் கடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.