Skip to main content

மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் இன்று இரவுடன் பிரச்சாரம் ஓய்கிறது!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது. இதில் ஆறு கட்டத் தேர்தல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ஏழாவது கட்ட (கடைசி கட்ட) மக்களவை தேர்தல் மேற்கு வங்கத்தில் (9) மக்களவை தொகுதிகளுக்கும் , உத்தரப்பிரதேசத்தில் (13), பஞ்சாப் (13), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (8), ஜார்கண்ட் (3), ஹிமாச்சல் பிரதேசம் (4), பீகார் (8) உட்பட மொத்தம் 59 மக்களவை தொகுதிகளுக்கு மே - 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது. இந்நிலையில் இதற்கான பிரச்சாரம் மேற்கு வங்க மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் நாளை மாலையுடன் ஒய்கிறது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் 14/05/2019 அன்று பாஜக தலைவர் அமித்ஷா  பிரச்சாரம் மேற்கொண்ட போது பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே  நடந்த மோதல் மற்றும் இதன் காரணமாக ஏற்பட்ட கடும் வன்முறையால் தத்துவ மேதை வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது.

 

 

eci

 

 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 324-பிரிவை கையில் எடுத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாளுக்கு முன்னதாக இன்று வியாக்கிழமை இரவு 10.00 மணிக்கு முடிக்கும் படி அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டது  . அதே போல் மேற்கு வங்க மாநிலத்தில் பல முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடைசிக்கட்ட மக்களவை தேர்தல் நடைப்பெறும் மாநிலங்களில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு புறம் மே-23 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்