Skip to main content

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரிக்கிறது !

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது . இந்த மக்களவை தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்  (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL)  என்ற இயந்திரத்தை அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் வைத்து நடைமுறைப்படுத்தியுள்ளது . மேலும் இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர் .

 

 

SUPREME COURT

அந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர் . இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறுகிறது . ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . அதில் வாக்கு எண்ணிக்கையுடன்  , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு  இறுதி முடிவுகள் வெளியீட காலதாமதமாகும் . எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது இயலாதது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . இருப்பினும் வழக்கை விசாரித்து உடனே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்