உச்சநீதிமன்றத்தில் 21 எதிர்கட்சிகள் தொடர்ந்த விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுக்களை 50% எண்ண வேண்டும் என்பது தொடர்பான மறு சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு எதிர்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி விசாரணை நடத்திய நீதிமன்றம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் , 5 வெவ்வேறு பகுதிகளை சார்ந்த வாக்குக்கு பதிவு இயந்திரங்களையும் , அதே விவிபேட் (VVPAT)இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மே - 23 அன்று வாக்கு எண்ணிக்கையின் போது இந்தியாவில் சுமார் 20000 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் , விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் ஒப்பிட்டு பார்க்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் , ஆனால் எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 5-ல் இருந்து 50% உயர்த்தி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரத்தில் -ல் பதிவான ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது தான் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை பார்வையிட ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்துடன் , விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்ப்பது ஆகும். இதனால் 17-மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின் போது இறுதி முடிவுகள் வெளியாக மாலை வரை ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன்னர் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் முன்னணி நிலவரம் சுமார் மதியம் - 1.00 மணிக்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்தல் முழுவதும் புதிய நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் கையாள்வதால் எண்ணிக்கையின் போது முன்னணி நிலவரங்கள் அதிக தாமதமாக தான் வெளிவரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
VVPAT SLIP COUNTING (5%) + ELECTRONIC VOTING MACHINEs(VOTE COUNTING 5%) : "ELECTION COMMISSION OF INDIA"