Published on 08/09/2022 | Edited on 08/09/2022

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றுக்கு ஏற்கனவே 4 அணிகள் தகுதிபெற்ற நிலையில் இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தொடர் தோல்விகளில் தத்தளித்து வரும் இந்திய அணி இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி அதிகபட்சமாக 122 ரன்கள் எடுத்துள்ளார். இவர் கடந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு தற்போது சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் யார் வெற்றிபெற்றாலும் அது தொடரில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.