Skip to main content

சீனா, இந்தியா ஆகிய நாடுகள் எத்தியோப்பியாவில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தம்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

எத்தியோப்பியாவில் நடந்த விமா‌ன விபத்தை தொடர்ந்து, போயிங் ரக விமான சேவையை சீனா உள்ளிட்ட நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

 

boeing

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம்  149 பயணிகள், 8 ஊழியர்களுடன் நேற்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் கனடா, சீனா, அமெரிக்க, கென்யா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாட்டினர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.மொத்தம் 157 பேர் பலியான இந்த விபத்தில், இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஐந்து மாதங்களில் போயிங் ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்தை சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். தற்போது எத்தியோப்பியாவில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய இரு விமானங்களுமே போயிங் ரகத்தை சேர்ந்தவை என்பதால் இந்த விமானம் குறித்து சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.
 

இதனால் சீனா, எத்தியோப்பியா, கேமேன் தீவுகள் உள்ளிட்ட நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. 

 

இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்