Skip to main content

இந்தியா ஜெர்சி அணிந்து சட்டசபைக்குள் நுழைந்த வினேஷ் போகத்!

Published on 25/10/2024 | Edited on 25/10/2024
Vinesh Phogat entered the assembly wearing India jersey

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இறுதிப் போட்டிக்கு கலந்துகொள்வதற்கு முன்னதாக, உடல் எடை 100 கிராம் அதிகம் இருப்பதாகக் கூறி அவரை 50 கிலோ மல்யுத்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் தான், ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் நின்று ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியை மட்டுமே சந்தித்த காங்கிரஸுக்கு, வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்தார். 

இந்த நிலையில், ஹரியானா சட்டசபையில் இன்று எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற வினேஷ் போகத், இந்தியா ஜெர்சி அணிந்து எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனை குற்றம் சாட்டி, பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு போராட்டங்களை வீரர்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்