உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரனாசியில், கட்டுமானப்பணியில் இருந்த பாலத்தின் ஒருபகுதி நேற்று மாலை இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய வாரனாசி பகுதியின் கலெக்டர், ‘இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநில பாலங்கள் கட்டுமானத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மீது கொடூரமான மரணங்கள் நடக்கக் காரணமாக இருந்தவர்கள் பிரிவு 304 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.