Skip to main content

துணை குடியரசு தலைவர் வாஜ்பாய் உடல்நிலையை விசாரித்தார்...

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
vengaiya naidu

 

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல் நலம் குன்றியதான் காரணமாக அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நலம் மோசடைந்துள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 


அவரது உடல்நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், உயிர் காக்கும் மருத்துவ உபகாரணங்களுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்துவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் 11 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த துணை ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். 
  

சார்ந்த செய்திகள்