உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காவி உடை குறித்து பிரியங்கா காந்தி கருத்து கூறியதற்கு, அவரை எச்சரிக்கும் விதமாக உ.பி. முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
திங்கள்கிழமை அன்று யோகி ஆதித்யநாத் குறித்து பேசிய பிரியங்கா காந்தி, "யோகி காவி உடை அணிந்துள்ளார், காவி என்பது இந்திய ஆன்மீக உணர்வின் குறியீடு. இந்துமதத்தின் குறியீடு. பழிவாங்கவோ, வன்முறைகளுக்கோ இந்து மதத்தில் இடமில்லை. எனவே அதற்கு ஏற்றாற்போல அவர் மத நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உ.பி முதல்வர் அலுவலகம் செய்துள்ள ட்வீட்டில், "முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு காவி உடையைப் பொதுச்சேவைக்காக அணிந்துள்ளார். அவர் காவி உடையை வெறுமனே அணியவில்லை, அதனை பிரதிநிதித்துவபடுத்துகிறார். காவி உடை என்பது பொதுநலன் மற்றும் தேசக்கட்டுமானம் தொடர்புடையது. யோகிஜி இந்தப் பாதையில் பயணிக்கிறார். ஒரு சன்யாசியின் பொதுநலன், பொதுச்சேவை பாதைக்கு தீமை விளைவிப்பவர் தண்டனையை அனுபவிப்பார்கள். குடும்பத்தின் மூலமாக அரசியலுக்குள் நுழைந்து, நாட்டை புறக்கணித்து திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பொதுச்சேவை பற்றி என்ன தெரியும்?” என்று பதிவிட்டுள்ளது.