உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பசுக்களைப் பாதுகாக்க நிதி ஒதுக்க வழிவகை செய்யும் வகையில் புதிய சட்டத்திருத்தம் அம்மாநிலத்தில் கொண்டுவரப்பட உள்ளது.
பசுக்கள் பாதுகாப்புக்குப் பெயர்போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பசுக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருங்காலத்தில் பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அம்மாநில அரசு புதிய சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர உள்ளது. அதன்படி, பசுக்களுக்குத் தங்குமிடம் அமைத்து தருவது போன்ற பசு பராமரிப்பு பணிகளுக்கு எம்.எல்.ஏ. க்கள் தங்களது தொகுதி மேம்பட்டு நிதியைப் பயன்படுத்த முடியும். இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின் 2020-21 ஆம் ஆண்டு முதல் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் பசுக்களுக்குத் தங்குமிடம், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை எம்.எல்.ஏ.க்கள் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.