Published on 22/03/2021 | Edited on 22/03/2021
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் தீரத் சிங் ராவத். உத்தரகாண்ட் மாநில பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், மாநில முதல்வராக்கப்பட்டார். தொடர்ந்து பெண்களின் ஆடை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கோரினார்.
தற்போது இந்தியாவை அமெரிக்கா அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்றும், ரேஷன் பொருட்கள் அதிகமாக வேண்டுமென்றால், நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே என பேசி, இணையதளங்களில் கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தீரத் சிங் ராவத், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.