Published on 23/12/2019 | Edited on 23/12/2019
வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், மோசடி, கொலை மற்றும் கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியாகி இருக்கும் இந்த பட்டியலில் தமிழகத்தின் கோயமுத்தூர் மாவட்டம் முக்கிய இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொள்ளாச்சி விவகாரமே கோயம்புத்தூர் மாவட்டம் இந்த பட்டியலில் இடம்பிடிக்க ஒரு காரணமாக இருந்துள்ளது. அதேபோல தென்னக நகரங்களில் பெங்களூர் எல்லா விதமான குற்றங்கள் பட்டியலிலும் முதல் 5 இடங்களுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் பாட்னா முதல் இடத்தையும், பெங்களூர் இரண்டாம் இடத்தையும், மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில், கோவை மாவட்டம் பாதுகாப்பு குறைவான மாவட்டமாக அதில் கூறப்பட்டுள்ளது.