![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/2b2dllDw1PMIlQz4JPjOj_74xm1EK3dj92FE5DzoxYA/1629973914/sites/default/files/inline-images/ffe_0.jpg)
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 31,445 பேருக்கு கரோனா உறுதியானது. இது நாட்டில் நேற்று பதிவான கரோனா எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதமாகும்.
அதேபோல் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலும் சில தினங்களுக்கு பிறகு, தினசரி கரோனா பாதிப்பு நேற்று ஐந்தாயிரத்தை கடந்தது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் கரோனா அதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரும், மத்திய உள்துறை செயலாளரும் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களும், மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.