குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (01/02/2021) காலை 11.00 மணியளவில் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட் அடங்கிய பெட்டகத்துடன் மத்திய நிதியமைச்சர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி 'ஸ்மார்ட் பட்ஜெட்' தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள 'யூனியன் பட்ஜெட்' (Union Budget) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.