Skip to main content

"பொறுத்துக்கொள்ளமாட்டேன்" கொந்தளித்த உத்தவ் தாக்கரே...

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

uddhav thackeray about jnu incident

 

 

முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "தாக்குதல் நடத்துபவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் கோழைகளாக இருந்திருப்பர். இந்த சம்பவங்களை நான் டிவியில் பார்த்துக்கொண்டிருந்த போது, அது 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டியது. மகாராஷ்டிராவில் இதுபோன்ற தாக்குதல்களை நான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்" என தெரிவித்துள்ளார். நாட்டில் மாணவர்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலை உள்ளது. நாம் அனைவரும்தான் ஒன்றிணைந்து அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்