கடந்த செவ்வாய்கிழமை (நேற்று) அன்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படும் என்று பாஜக கொடுத்த வாக்குறுதி ஒரு பொய்யானது என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர், “ பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ15 லட்சம் அளிப்பதாக தெரிவித்தது போன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக் தெரிவித்ததும் ஒரு பொய்யான வாக்குறுதிதான். ஆனால் நாம் ராமர் கோவிலை பற்றி பேசும்போது அதை முழுவதுமாக கட்டியே தீர வேண்டும் என்கிற நோக்கில் இருக்கிறோம்” என்றார்.
மேலும், ஏன் தேர்தால் சமயங்களில் மட்டும் பாஜக அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவது பற்றி பேசுகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற பின் அதை மறந்துவிடுகிறது. முழுக்க அரசியல் தேர்தல் உள்நோக்கத்துடனேயே செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டினார்.
தாக்கரே கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி அயோத்தியாவுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார். முன்னதாக உச்சநீதிமன்றத்திலுள்ள இந்த அயோத்தி வழக்கை ஜனவரி மாதத்திற்கு அக்டோபர் 29 ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.