இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான டிவிஎஸ் குழுமம். அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான 'சுந்தரம் கிளேட்டன் நிறுவனம்' ரூபாய் 630 கோடி முதலீட்டில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் வெளிநாட்டில் அமைக்கும் முதலாவது ஆலை ஆகும். வட அமெரிக்காவில் இந்நிறுவனத்துக்கு உள்ள வாடிக்கையாளர்களின் தேவையை இனி இந்நிறுவனம் பூர்த்தி செய்யும் என்று நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் லட்சுமி வேணு தெரிவித்தார். இங்குள்ள ரிட்ஜ்வில்லே தொழிற்பூங்காவில் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைத்துள்ளது. சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் ஏற்றுமதிகளில் 60 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. அதே போல் நிறுவனத்தில் ஏற்றுமதி வருவாயில் 40% அமெரிக்க சந்தையில் பங்களிப்பாக உள்ளது.
இங்கு ஆலை தொடங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் சப்ளை செய்யும் நிறுவனமாக உயர்ந்துள்ளது சுந்தரம் கிளேட்டன். அதனைத் தொடர்ந்து தெற்கு கரோலினாவில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் உயர் அழுத்தத்திலான டை-கேஸ்ட் மற்றும் டை-கேஸ்ட் உதிரிப்பாகங்கள் உற்பத்திச் செய்யப்பட உள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் அனைத்தும் ஆட்டோமொபைல் துறையை சார்ந்ததாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் டிவிஎஸ் குழுமம் தனக்கென்று தனி முத்திரை பதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.