ரயிலில் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்க திட்டம்!
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது மடிக்கணினி, ஸ்மார்ட்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களின் வழியாக சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான ரயில்வேதுறை அமைச்சர் ராஜென் கோஹன், இதுகுறித்து மாநிலங்களவையில் இதுகுறித்து தந்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், ‘நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,300 ரயில்களில் இந்த சேவையை வழங்க முடிவுசெய்துள்ளோம். இதற்கான முன்மொழிவு கடந்த ஜூலை 6- ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட 1,300 ரயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தபின் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த சேவையைப் பயன்படுத்த பயணிகள் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இதன்மூலம் வருவாயில் 10-20% உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ச.ப.மதிவாணன்