Published on 11/03/2024 | Edited on 11/03/2024

பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் திருமண நிகழ்வுக்காகச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 50 பேர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி விழுந்துள்ளது. இதனால் பேருந்தில் தீப்பற்றியது. இதனைக் கண்டு அருகில் இருந்த பொதுமக்கள், வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேருந்து சி.என்.ஜி. வகை எரிபொருளால் இயங்கும் வகையைச் சேர்ந்தது எனவும் கூறப்படுகிறது. பேருந்து தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.