கர்நாடகாவில் அரசு சார்பில் திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு நடத்தும் இந்த விழாவிற்கு முதலமைச்சர் குமாரசாமியே செல்ல போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்த ஜெயந்தியை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தியது. அதேபோல இன்று மடிகேரி என்னும் பகுதியில் பல்வேறு அமைப்புள் போராட்டம் நடத்தி வருகின்றன. சிலர் அந்த பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு பல போலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாஜக மாவட்ட செயலாளர் சஜ்ஜல் கிருஷ்ணா கூறுகையில், திப்பு ஜெயந்திக்காக பொது மக்களின் பணத்தை வீணடிக்கிறது. அவர் ஒன்றும் வீரர் அல்ல, பல ஹிந்துக்களை கொன்றதுடன், ஹிந்து கோவில்களை சேதப்படுத்தியுள்ளார். இது போன்றவரை எதற்காக புகழ வேண்டும். இது ஓட்டுவங்கி அரசியல் மட்டுமே. குடகு பகுதியில் கூட இதை எதிர்க்கிறார்கள் என்றார்.
இறுதியில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினரை போலிஸார் கைது செய்துள்ளனர்.