Skip to main content

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து "டிக் டாக்" ஆப் (TikTok App) நீக்கம்!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

"டிக் டாக்" மொபைல் செயலியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த செயலியை பயன்படுத்தி , தேவையற்ற சில வீடியோக்களை வெளியீடுகின்றனர். இதனால் சமூகத்தில் சீர்கேடு மற்றும் பள்ளி மாணவர்கள் , கல்லூரி இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த அமர்வு உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து "TIK TOK" மொபைல் செயலியை நீக்க உத்தரவிட்டது. 

 

tiktok



இதன் அடிப்படையாக கொண்டு இன்று கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப் நீக்கிவிட்டது. இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஏனெனில் தற்போது உலகில் அனைவரும் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை Android Mobile -லை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் Android செல்போனில் இருக்கும் தேவையற்ற மொபைல் செயலிகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது பிளே  ஸ்டோரில் (Play Stores) தேவையற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ், சேலம் .

சார்ந்த செய்திகள்