Skip to main content

தட்கல் கட்டண முறையில் புதிய மாற்றம்: டிக்கெட்டைப் பெற்றபின் பணம் செலுத்தினால் போதும்!

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
தட்கல் கட்டண முறையில் புதிய மாற்றம்:
டிக்கெட்டைப் பெற்றபின் பணம் செலுத்தினால் போதும்!

இந்தியன் ரயில்வேயில் முன்பதிவு மூலம் பயணம் செய்பவர்களில், கணிசமனாவர்கள் தட்கல் முறையையும் பயன்படுத்துகின்றனர். தட்கல் முறையில் கட்டணம் செலுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால், அதை சரிசெய்ய ஐஆர்சிடிசி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, தட்கல் பயணச்சீட்டைப் பதிபவர்கள் பணம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் பயணக்கட்டணத்தைச் செலுத்தலாம். அதுவும் பயணச்சீட்டு வீடுதேடி வரும் போது கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. 

பணத்தைப் பிறகு செலுத்தும் நடைமுறை பொது முன்பதிவு முறையில் மட்டுமே இருப்பதாகவும், தற்போது தட்கலிலும் இதைக் கொண்டுவருகிறோம் எனவும் ஐஆர்சிடிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 1.30 லட்சம் தட்கல் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. காலியிடங்களும் பட்டியல் வெளியிட்ட சில நிமிடங்களில் நிரம்பிவிடுகின்றன.

தட்கலில் பயணச்சீட்டுக்காக பதிந்த பிறகு பல்வேறு காரணங்களால் பயணச்சீட்டு கிடைக்காமல் பயணிகள் அவதியுறுதின்றனர். அவர்களது பணம் திரும்பக் கிடைக்கவும் 7 - 15 நாட்கள் ஆகின்றன.

இதைத் தடுக்கவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்