Skip to main content

தாராபூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து - இதுவரை 4 பேர் பலி!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பொய்சர்-தாராபூர்  தொழிற்பேட்டையில் ராமெடியோ என்ற கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் பாய்லர் வெடித்ததில்  ஏற்பட்ட தீயினால் முழு தொழிற்சாலையும் எரிந்து நாசமாகியது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த பாயிலர் வெடிப்பில் 8 கி.மீ தூரத்திற்கு ஏற்பட்ட பெரும் சத்தத்தினால் சுற்றியுள்ள மக்கள் அதிர்ந்தனர். மேலும் இந்த தீயானது அருகிலுள்ள ஆறு தொழிற்சாலைகளிலும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

fire



இந்த தீ விபத்தின் சேதங்களை  நேரில் பார்வையிட்ட  பால்கர்  மாவட்ட கலக்டர் பிரசாத் நார்னவாரோ தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவர முழு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதுவரை 4 பேர் இறந்துள்ளனர். மேலும்  முழு கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னரே எவ்வளவு உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் என உறுதியாக கூறமுடியும் எனக்கூறினார்.   

சார்ந்த செய்திகள்