![gfhgfh](http://image.nakkheeran.in/cdn/farfuture/GIudlBtm5xOD66iLpBqlv5eYbuSD0yF3nzQe7j0NEes/1549024706/sites/default/files/inline-images/images-%285%29-in_0.jpg)
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெடை பியூஷ் கோயல் தாக்கல் செய்து வருகிறார். அதில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை பியூஷ் கோயல் அறிவித்து வருகிறார். அதன்படி வருமானவரி விலக்கிற்கான உச்சவரம்பு தொகை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்டு வருமான 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அது தவிர வரும் ஆண்டுகளில் கூடுதலாக 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் 6 கோடி இணைப்புகள் தரப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதுபோல மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் வாங்கும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக பெரும் வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பேரு கால விடுப்பதாக 26 வாரங்கள் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.