மத்திய இணை மந்திரிகள் 2 பேர் திடீர் ராஜினாமா
டெல்லி மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி பதவியில் இருந்து வந்த மகேந்திர நாத் பாண்டே ராஜினாமா செய்துள்ளார். அதனை தொடர்ந்து மத்திய திறன்மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாக இருந்து வந்த ராஜீவ் பிரதாப் ரூடி ராஜினாமா செய்துள்ளார். உத்தரபிரதேச பாஜக தலைவராக மகேந்திர நாத் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் 2 இணை மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். எனினும் இவர்களின் ராஜினாமாவை பிரதமர் மோடி முடிவு எடுக்கவில்லை. ராஜீவ் பிரதாப் ரூடிக்கு கட்சிப்பணிக்கு அனுப்பபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.