அறிவியல் அதிசயங்கள் என்பது சில நேரங்களில் நம்ப முடியாத அளவிற்கு மனிதர்களையே திகைக்கவைத்து விடுகிறது. அதன் அடிப்படையில் சில தனித்துவம் வாய்ந்த அதிசய நிகழ்வுகளை கேள்விப்படும்பொழுது நம்பலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்தையே உருவாகிவிடுகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் நடத்துள்ளது மத்தியபிரதேசத்தில். மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங், தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை சமீபத்தில் விதைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு பிறகு தனது தோட்டத்தை பார்வையிட சென்ற அவர் அங்கு ஒரு எலி உடலில் பீன்ஸ் செடி ஒன்று முளைத்தபடி அங்கும் இங்கும் ஓடியதைக் கண்டார். அவர் அந்த எலியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பிறகு அந்த எலியை பிடித்து அதன் கழுத்து பகுதியில் வளர்ந்திருந்த பீன்ஸ் செடியை பிடுங்கியுள்ளார். இந்த அதிசயம்பற்றி கல்லூரி உயிரியல் தலைவர் ஒருவர் கூறுகையில் கழுத்தில் காயம் ஏற்பட்டபொழுது விதை அங்கு விழுந்திருக்கும் அதனால் இப்படி செடி வளர்ந்திருக்கலாம் என்றும் கழுத்து பகுதியில் செடி வளர்ந்திருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்ட எலியின் மூளையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.