புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மசூத் அசாரை 'மசூத் அசார் ஜீ' என அழைத்ததாக சர்ச்சை எழுந்தது. ராகுல் காந்தி அப்படி பேசியது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
அதன்படி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் தீவிரவாதிகளை குறிக்க "ஜீ" எண்ணற்ற வார்த்தையை தான் உபயோகிக்கிறார்கள், எடுத்துக்காட்டாக அமெரிக்கா ஒசாமாவை 'ஒசாமா ஜீ' என அழைக்கும். அதற்கு 'ஒசாமா கேங்ஸ்டர்' என்பது பொருள் என விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக வின் ஸ்மிரிதி இரானி தனது ட்விட்டரில், "ராகுல் காந்தி மற்றும் பாக்கிஸ்தான் இடையே ஒற்றுமை என்ன தெரியுமா? பயங்கரவாதிகள் மீதான அன்பு தான். பயங்கரவாதி மசூத் அஸாருக்கு ராகுல் மரியாதை மரியாதை கொடுத்திருப்பதே அதற்கு ஒரு சாட்சியம்" என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் தனது ட்விட்டரில், "ராகுல் காந்தி தனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதை தான் பேசுகிறார். பயங்கரவாதிகளுக்கு பிரியாணி ஊட்டிவிடும் நபர்கள் தான் இராணுவத்தின் துணிச்சலுக்கான ஆதாரம் பற்றி கேட்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.