
கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், மாநிலம், சேகான் மகான் பகுதியில் உள்ளூர் திருவிழாவான கங்கூர் திருவிழா தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திருவிழாவில், ஒரு பகுதியாக கோயில் சிலைகளை, அங்குள்ள கிணற்றில் மூழ்கவைத்து வழிபடுவது வழக்கம்.
அதற்காக, அங்குள்ள ஒரு கிணற்றை சுத்தம் செய்ய 8 தொழிலாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது, கிணற்றில் இருந்து விஷவாயு வெளியாகியுள்ளது என்று கூறப்படுகிறது. அந்த விஷவாயுவை சுவாசித்ததால், கிணற்றுக்குள் இறங்கிய ராகேஷ் படேல், அனில் படேல், , அஜய் படேல், ஷரன் படேல், வாசுதேவ் படேல், கஜானன் படேல், அர்ஜுன் படேல், மற்றும் மோகன் படேல் ஆகிய 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த தொழிலாளர்களை தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது. திருவிழாவின் போது 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.