
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. கல்வி நிறுவவனங்கள் அனைத்திற்கும் இந்தியா முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் தன்னை டியூஷன் போகச்சொன்ன காரணத்திற்காக பஞ்சாப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் தன் வீட்டிற்கு காவலர்களை அழைத்து வந்து தன்னை ட்யூஷன் போக சொன்ன அம்மா, அப்பாவை காவலர்களிடம் மாட்டிவிட்டுள்ளான். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிறுவனுக்கு ஆதரவான கமெண்ட்டுகள் அந்த வீடியோவில் அதிகம் வருகின்றன.