சிறையில் உணவருந்த மறுக்கும் சாமியார் குர்மீத் சிங்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் சிங், உணவருந்த மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பக்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரோக்தக் பகுதியில் உள்ள சுனைரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் சிங், இரவு உணவை உண்ண மறுத்ததாகவும் சிறிது தண்ணீரும், காலை பால் அருந்தியதாகவும், யாரோடும் பேசாமல் தனது அறைக்குள் நடந்துகொண்டே இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது ஹரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களில் கலவரங்கள் நடந்தன. எனவே, அந்தப்பகுதிகளில் இன்னமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கலவரங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்னமும் இணைய வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்