Skip to main content

அசுத்தமான ஏரி நீரை சுத்தமாக்க எளிய ரசாயன வழிமுறை!

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
அசுத்தமான ஏரி நீரை சுத்தமாக்க எளிய ரசாயன வழிமுறை!



(ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட ஹுசைன்சாகர் ஏரியின் நடுவில் உள்ள புத்தர் சிலை புகைப்படம்)

அசுத்தமடைந்த ஏரி நீரை சில மணி நேரத்தில் சுத்தமாக்குவதற்கு எளிய ரசாயன தொழில்நுட்பத்தை ஓஸ்மானிய பல்கலைக்கழக குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அந்த தொழில்நுட்பத்தை தெலங்கானா அரசு கண்டுகொள்ளாததால் தண்ணீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் வெளிநாடுகளை அணுக முடிவு செய்திருப்பதாக குழுவினர் தெரிவித்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஓஸ்மானிய பல்கலைக்கழக  தாவரவியல் துறையைச் சேர்ந்த சி.வெங்கடேஸ்வர் மற்றும் சிலர் அடங்கிய குழு இந்த புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

அந்த மாநிலத்திலுள்ள ஹுசைன்சாகர் ஏரியில் தங்கள் ஆய்வை இந்தக் குழு நடத்தியது. தாங்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஏரியில் பயன்படுத்திய சில மணி நேரத்தில் தண்ணீரின் ஆக்சிஜன் அளவு சுமுக நிலைக்கு மாறியது. உயிரினம் வாழத் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் அளவு மாறியதுடன், தண்ணீரும் குடிக்கத்தக்கதாக மாறியிருந்தது.

இந்தத் தொழிலநுட்பத்துக்கு சி.வி.டெக்னாலஜி என்று பெயரிட்டு காப்புரிமை பெற்றுள்ளனர். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து தெலங்கானா அரசு மவுனம் சாதிக்கிறது. எனவே, தண்ணீர் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் பிற நாடுகளின் உதவியை நாடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

-A/C

சார்ந்த செய்திகள்