மஹாராஷ்ட்ராவில் அமைச்சரவை அமைப்பதில் காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் அம்மாநிலத்தில் குடியரசு தலைவரை ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவை முதலில் அம்மாநில ஆளுநரை அழைத்த நிலையில், பாஜக ஆட்சியமைப்பதில் விருப்பம் இல்லை என கூறி ஒதுக்கிக்கொண்டது. பின்னர் 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் ஆளுநர், ஆட்சி அமைக்க அழைத்தார். சிவசேனா ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததோடு, ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க மறுத்த ஆளுநர், பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைப்பது குறித்து முடிவை அறிவிக்க சொன்னார்.
இந்த சூழலில், சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்து விட்டதால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், ஆதரவு கடிதங்கள் அளிக்க 3 நாட்கள் அவகாசம் வழங்க மறுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.