Skip to main content

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூரின் நெருங்கிய உறவினர்கள் பாஜகவில் இணைந்தனர்...!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

கொச்சியில் பாஜக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசிதரூரின் அத்தை சோபனா சசிகுமார், அவரின் கணவர் சசிகுமார், மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் மொத்தம் 14 பேர்  பாஜகவில் முறைப்படி இணைந்தனர். பாஜகவில் இணைந்த அனைவருக்கும், மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பாஜக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. 

 

shashi tharoor

 

கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்த நிலையில், நேற்று சசிதரூர் குடும்பத்தார் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



சசிதரூரின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் அனைவரும் நீண்டகாலமாகவே பாஜகவின் ஆதரவாளர்களாகதான் இருந்துவருகிறோம். ஆனால், பாஜகவில் இணைவதற்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏன் ஏற்பாடு செய்தார்கள் எனபது தான் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு மோடி செய்தது என்ன?” - காங்கிரஸ் எம்.பி. கேள்வி

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Congress M.P. shashi tharoor questioned on What has Modi done for India?

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அரசியல் தலைமை குழு (பொலிட் பீரோ) அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலையும், பிப்ரவரி 14ஆம் தேதி அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலையும் திறக்க உள்ளார். அதன் பிறகு, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். எனவே, விஷயம் தெளிவாக உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் மோடி இந்திய வாக்காளர்களுக்கு பொருளாதார வளர்ச்சியின் அவதாரமாகவும், குஜராத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் காட்சிப்படுத்தப்பட்டார். அவர் அனைத்து இந்தியர்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டு வருவார் என்று கூறப்பட்டது. 

ஆனால், 2019 ஆம் ஆண்டில், பணமதிப்பிழப்பு என்னும் பேரழிவுகரமான நடவடிக்கைக்குப் பிறகு அந்தக் கதை சரிந்த நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், மோடிக்கு பொதுத் தேர்தலை தேசிய பாதுகாப்புத் தேர்தலாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது. அடுத்ததாக 2024ஆம் ஆண்டில், பா.ஜ.க, நரேந்திர மோடியை இந்துக்களின் இதய சக்கரவர்த்தியாக முன்னிறுத்தும் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த நேரத்தில், இவை அனைத்துக்கும் சில கேள்விகள் எழுகின்றன. நீங்கள் இந்தியாவிற்கு செய்தது என்ன?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது?. சமூக-பொருளாதார ஏணியின் கீழ்மட்டத்திற்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன ஆனது?. ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்குகளிலும் செலுத்தக்கூடிய வருமானம் என்ன ஆனது? இந்துத்துவத்திற்கும், மக்கள் நலனுக்கு இடையே நடக்க இருக்கும் தேர்தலில் இந்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

"ஒமிக்ரானை விட ஆபத்தானது ஒ மித்ரான்" - மோடியை தாக்கிய சசி தரூர்!

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

shashi tharoor

 

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்துவதாகவும், மக்களிடையே வெறுப்பை விதைப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரதமர் மோடி நாட்டு மக்களை குறிக்க பயன்படுத்தும் வார்த்தையான மித்ரான் என்ற வார்த்தையை குறிப்பிட்டு, அவரை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒமிக்ரானை விட மிகவும் ஆபத்தானது 'ஒ மித்ரான்'. அதன் விளைவுகளை அதிகரித்துள்ள மதரீதியிலான மக்கள் பிளவு, வெறுப்பு மற்றும் மதவெறியை ஊக்குவிக்கும் செயல்பாடுகள், அரசியலமைப்பின் மீதான நயவஞ்சகத் தாக்குதல்கள், ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் செயல்கள் ஆகியவற்றிலிருந்து நாம் அளவிடுகிறோம்" என கூறியுள்ளார்.

 

மேலும் "இந்த ('ஓ மித்ரான்) வைரஸில் லேசான மாறுபாடு எதுவுமில்லை" எனவும் சசி தரூர் கூறியுள்ளார்.