Skip to main content

அமித்ஷா, ஸ்மிருதி இராணிக்கு மோடி வாழ்த்து

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
அமித்ஷா, ஸ்மிருதி இராணிக்கு மோடி வாழ்த்து

குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இராணி, ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிட்டார்.

அமித்ஷா, ஸ்மிருதி இராணி மற்றும் காங்கிரசின் அகமது படேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமித்ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக வாக்குப்பதிவு நடைபெற்றபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பா.ஜ.க தலைவரிடம் காண்பித்தனர். இதனால், அவர்கள் இருவரது வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் முறையிட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர்களது வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சார்ந்த செய்திகள்