உத்தரபிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 12-வயது சிறுமி பள்ளியிலேயே வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பள்ளியில் மனநலம் பாதிக்கப்பட்ட 12-வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தான் ஏதோ ஒருவித சித்ரவதைக்கு ஆளானதை உணர்ந்த அந்த சிறுமி அதைத்தன் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அறிந்த பெற்றோர் கான்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அந்த புகாரை ஏற்காமல் அவர்கைளை காவல்நிலையத்திலேயே பலமணிநேரம் உட்கார வைத்தனர். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பு அந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.
அண்மையில் சென்னையில் குடியிருப்பு ஒன்றில் 12 வயது சிறுமி குடியிருப்பில் வேலை செய்த ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மற்றும் பீஹாரில் சிறுமிகள் காப்பகத்தில் 34 -சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் போன்றவை குறிப்பிடத்தக்கது.