Skip to main content

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்... வருகின்றதா புதிய சட்டம்..?

Published on 17/12/2019 | Edited on 18/12/2019


கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்தின் தாக்கமே இந்தியாவில் குறையாத நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசின் சலுகைகள் கிடைக்க பெறாத வண்ணம் புதிய சட்டம் இயற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. இதனை குறைக்கும் வகையில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு ரேஷன் பொருட்களை குறைப்பது, மூன்றாவது குழந்தையை அரசு மருத்துவமனையில் பிறக்க அனுமதி மறுக்க செய்வது என்பதை உள்ளடக்கிய புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது.



இதே போன்று ஒரு சட்டத்தை சீனா 25 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் நாட்டில் அமல்படுத்தியது. ஆனால் அதன்  காரணமாக அந்நாட்டில் இளைஞர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து அந்த சட்டத்தை அந்நாடு திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்