Published on 05/01/2021 | Edited on 05/01/2021

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (05.01.2021) இலங்கை செல்கிறார்.
இலங்கை செல்லும் அவர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனாவையும், இலங்கையில் ஆட்சியில் இருக்கும் மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தச் சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருநாடுகளிடையேயான உறவுகுறித்து விவாதிப்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.