எஸ்.சி ,எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக கையாளப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட வழக்கில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனடி கைது கூடாது தீவிர விசாரணைக்கு பிறகுதான் கைது செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகும் ஒன்று என பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது. இதனை அடுத்து கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து பல அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.
குறிப்பாக பீஹார் மற்றும் மத்தியபிரதேசத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மத்தியபிரதேசத்தில் 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பல மாவட்டங்களில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் மதியம் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடந்துவருகிறது.