Published on 05/11/2019 | Edited on 05/11/2019
மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சிப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல்வர் பதவி ஏற்ககூடும் எனவும் தகவல் வெளியாகின. ஆனால் இதனை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக தான் இருப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. மகாராஷ்டிராவின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவின் அரசியல் தற்போது மாறி வருகிறது. நீதிக்காக போராடி வருகிறோம்’’ என தெரிவித்தார்.