Skip to main content

699 கோடி வரி கட்டிய இந்திய தொழிலதிபர்...

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

fthj

 

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஒன்றான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீதப் பங்குகளை  சச்சின் பன்சால் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்றார். இதன் மூலம் கிடைத்த வருமானத்திற்காக சச்சின் பன்சால் 699 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள பிளிப்கார்ட்டின் 77 சதவீதப் பங்குகளை வால்மார்ட் வாங்கியுள்ளது. எனவே சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. இந்தநிலையில் வால்மார்ட்டுடனான ஒப்பந்தத்துக்காக சச்சின் பன்சால் 699 கோடி ரூபாயை முன்கூட்டியே வருமான வரியாகச் செலுத்தியுள்ளார். எனினும் பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை குறித்து சச்சின் பன்சால் தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பின்னி பன்சால் இதுபற்றி எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்