கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வரலாறு இடம்பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவுக்குப் பல்வேறு சிறப்புகள் எப்போதும் உண்டு. இந்த மாநிலத்தின் கல்வியறிவு மற்ற மாநிலங்களைவிட எப்போதும் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் தற்போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் காந்தியடிகள், நேருவுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், வீர சாவர்க்கர், தீனதயாள் உபாத்யாயா ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளும் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மாநிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்க இரண்டு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.