Published on 01/01/2023 | Edited on 01/01/2023

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாகக் குறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் நாளிலேயே 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25 அதிகரித்து ரூ. 1,917-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருடத்தின் முதல் நாளே வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது வணிகர்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.