Skip to main content

எல்லா ரோஹிங்யாக்களும் பயங்கரவாதிகள் இல்லை: மம்தா பானர்ஜி

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
எல்லா ரோஹிங்யாக்களும் பயங்கரவாதிகள் இல்லை: மம்தா பானர்ஜி

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான அரசின் முடிவு அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எங்கள் மத்தியில் எந்த ஒரு பயங்கரவாத செயல்பாடும் கிடையாது என ரோஹிங்யா அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக நேற்று அபிடவிட் தாக்கல் செய்து உள்ள மத்திய அரசு, 

ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவாகும், சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என தெரிவித்து உள்ளது.

ரோஹிங்யா அகதிகளுக்கு உலக பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உள்ளது. அவர்களை தொடர்ச்சியாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிப்பது என்பது தேசத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் எனவும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இவ்விவகாரத்தில் மேற்கு வங்காள மாநில அரசு மாறான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. 

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், எல்லா சமூதாயத்திலும் நல்ல மக்களும், சில தவறான மக்களும் உள்ளனர். பயங்கரவாத செயல்களை ஒருபோதும் சமரசம் செய்துக் கொள்ளக்கூடாது. பயங்கரவாதிகள் இருப்பின் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்க கூடாது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், மனிதநேயமும் பாதிப்புக்கு உள்ளாகும் என, இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்