![ramnath](http://image.nakkheeran.in/cdn/farfuture/FJFsYEeNbw02xfHMXgbXkthd0RrgMSByrBMyDWrlCZQ/1533481890/sites/default/files/inline-images/dfgddd.jpg)
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிரி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கலைஞரின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல் நிலை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சினிமா பிரபலங்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்பட பலரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். பிறகு காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசு தலைவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலாலும் உடனிருந்தார். இந்த சந்திப்பு சுமார் பத்து நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பிறகு திரும்பினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.