காணாமல் போனவர்களை மீட்க - கடலோர காவல்படையுடன் மீனவர்களும் இணைகின்றனர் : நிர்மலா சீதாராமன்
ஒகி புயல் பாதிப்பால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையுடன் மீனவர்களும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதன் பேரில், காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவல்படையினரின் கப்பலில் தூத்தூர் மீனவர்களும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.