நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (31/01/2022) காலை 11.00 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பட்ஜெட் தொடர் முக்கியமான நேரம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. மத்திய நிதிநிலை அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, குதிரைப்படை வீரர்கள் புடை சூழ காரில் நாடாளுமன்றத்திற்குப் புறப்பட்டார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.