பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்திய ரூபாய் தாள்கள் புதிய வண்ணங்களிலும், அளவுகளிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், 2000, 500, 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது 20 ரூபாய் நோட்டுகள் புதிய வண்ணத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான சக்திகாந்ததாஸ் கையெழுத்திட்ட இந்த நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, புதிய நோட்டுகள் வந்தாலும் பழைய 20 ரூபாய் நாடுகளும் செல்லும் என அறிவித்துள்ளது. இந்த நோட்டு பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் காந்தியின் படமும், பின்புறம் எல்லோரா குகையின் படமும் இடம்பெற்றுள்ளது.